என் 95 மாஸ்க் உள்ளே ரகசிய மைக் - மோசடி மாணவர்களை கைது செய்த போலீஸ்

என் 95 மாஸ்க் உள்ளே ரகசிய மைக் - மோசடி மாணவர்களை கைது செய்த போலீஸ்
என் 95 மாஸ்க் உள்ளே ரகசிய மைக் - மோசடி  மாணவர்களை கைது செய்த போலீஸ்
x
என் 95 மாஸ்க் உள்ளே ரகசிய மைக் - மோசடி  மாணவர்களை கைது செய்த போலீஸ்  

என் 95 மாஸ்க் உள்ளே ரகசிய மைக் வைத்து நீட் தேர்வின் போது மோசடியில் ஈடுபட்ட 11 பேரை  ராஜஸ்தானில் போலீசார் கைது செய்தனர்.நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் ஆங்காங்கே நடந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இப்போது மாஸ்கை வைத்து  மோசடி ஒன்று அரங்கேறி இருக்கிறது. ஜெய்ப்பூர் மற்றும் சிஹார் உள்ளிட்ட பகுதிகளில் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அவர்கள் சோதனை நடத்த சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த சிலரை பிடித்து விசாரித்த போது அவர்கள் என் 95 மாஸ்க் உட்பகுதியில் ரகசிய மைக்கை பொருத்தி அதன் வழியாக தகவல்களை பெற்று தேர்வெழுதியது தெரியவந்தது. இதில் ஒரு மாணவி உள்ளிட்ட 11 மாணவர்கள் சிக்கிய நிலையில் அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகவும், கேள்வித்தாள்களை வெளியிட்டதாக சிலரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். 
 
Next Story

மேலும் செய்திகள்