ஆன்-லைன் மூலம் திருமணம் - கேரள உயர்நீதிமன்றம் அனுமதி

நாட்டிலேயே முதல் முறையாக ஆன்-லைன் மூலம் திருமணம் செய்துகொள்ள கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
ஆன்-லைன் மூலம் திருமணம் - கேரள உயர்நீதிமன்றம் அனுமதி
x
உக்ரைன் நாட்டில் வேலைபார்த்து வரும் கேரளாவை சேர்ந்த ஜீவன்குமார் என்பவர், கழக்கூட்டம் பகுதியைச் சேர்ந்த தன்யா என்ற பெண்ணை திருமணம் செய்ய இருந்துள்ளார். இருப்பினும் கொரோனா பரவலால், ஜீவன்குமார் கேரளா திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, ஆன்-லைன் மூலம் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்குமாறு மணப்பெண் தன்யா, கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், ஆன்-லைன் மூலமாக திருமணம் செய்துகொள்ள இடைக்கால அனுமதி அளித்து உத்தரவிட்டது. இருப்பினும் மத்திய, மாநில அரசுகளின் வாதங்களைக் கேட்டு இவ்வழக்கில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்-லைன் மூலம் திருமணம் செய்துகொள்ள அனுமதிப்பது, இந்தியாவிலே இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்