விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: மாநிலங்களில் உள்ள கட்டுப்பாடுகள் என்ன...?

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மாநில அரசுகள் கொண்டு வந்திருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்...
x
விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் மகாராஷ்டிராவில், கொரோனா காரணமாக பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகரை நேரடியாக சென்று தரிசிக்க மக்களுக்கு அனுமதியில்லை. 


சிலைகளை கரைக்க எடுத்து செல்லும்போது ஊர்வலத்தில்10 பேருக்கு மேல் கலந்து கொள்ள கூடாது. 10 பேரும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோசும் செலுத்தியிருக்க வேண்டும்.


வீடுகளில் 2 அடி வரையிலான சிலையை பிரதிஷ்டை செய்யலாம், ஆனால் சிலைகளை கரைக்க 5 பேருக்கு மேல் செல்ல கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு அரசும், மாநகராட்சியும் அனுமதி வழங்கி இருக்கிறது. 

பெங்களூருவில் பொது இடங்களில் ஒரு வார்டுக்கு ஒரு சிலை மட்டுமே வைக்க அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கலாசார நிகழ்ச்சிகள், ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுபவர்கள் அந்த சிலையை வீட்டிலேயே கரைக்க வேண்டும்.

டெல்லியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதியில்லை.

விநாயகர் பந்தல் அமைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ அனுமதி கிடையாது.

எந்தஒரு மத வழிப்பாட்டு தளத்திலும் மக்கள் கூட்டம் கூட அனுமதி கிடையாது.

தமிழகத்தில் பொது இடங்களில் சிலையை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

வீடுகளில் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது, வீடுகளில் வைக்கப்படும் சிலைகளை தனிநபராக சென்று கரைக்கலாம் அல்லது அருகிலிருக்கும் கோவிலில் ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திராவிலும் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தனியார் இடங்களில் அமைக்கப்படும் பந்தலில் தரிசனத்திற்கு 5 பேர் மட்டும் செல்லாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குஜராத் மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்