கொரோனா 2ம் அலை முடியவில்லை - எச்சரிக்கும் அதிகாரிகள்

கொரோனாவின் இரண்டாவது அலை முடிவுக்கு வராததால் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாடுமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது
கொரோனா 2ம் அலை முடியவில்லை - எச்சரிக்கும் அதிகாரிகள்
x
கொரோனாவின் இரண்டாவது அலை முடிவுக்கு வராததால் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாடுமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண்,  கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு நோய் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகவும், அதில் கேரளாவில் மட்டும் 32000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்தியா முழுவதிலும் உள்ள மொத்த பாதிப்பில் கேரளாவில் 69 % ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். 

கொரோனாவில் இரண்டாம் அலை முடிவுக்கு வரவில்லை என்பதால்,  தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை வீட்டிலிருந்த படி கவனமாக கொண்டாடுமாறு  ராஜேஷ் பூஷண் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய ICMR தலைவர் பல்ராம் பார்கவா, காரணமின்றி மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு  கூறினார். கொரோனாவின் தடுப்பூசிகள் முழுமையான பாதுகாப்பை வழங்குவதுடன், முதல் டோஸ் 96.6% இறப்பையும், 2 டோஸ் 97.5% இறப்பையும் குறைப்பதாக தெரிவித்தனர். 

வைரஸ் பரவலுக்கு பண்டிகை கொண்டாட்டங்கள் சாதகமானதாக இருக்கும் என்பதால் அனைவரும் எச்சரிக்கையுடன் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஆய்வு இறுதிக்கட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்ட அதிகாரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் கட்டாயம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினர். 


Next Story

மேலும் செய்திகள்