அசாமில் படகுகள் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் மாயம்

அசாமில் பிரம்மபுத்ரா நதியில் நிகழ்ந்த படகு விபத்தில் 4 பேர் மாயமாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அசாமில் படகுகள் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் மாயம்
x
 மஜூலி என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நதியில் தத்தளித்த 42 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு  ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அசாமில் நிகழ்ந்த படகு விபத்து  கவலை அளிப்பதாகவும், பயணிகளை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்