தேர்தல் ஆணையத்திற்குக் கூடுதல் அதிகாரம் - மத்தியசட்டத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை

தேர்தலில் பல ஆண்டுகளாக போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை வழங்குமாறு, மத்திய சட்டத் துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
தேர்தல் ஆணையத்திற்குக் கூடுதல் அதிகாரம் - மத்தியசட்டத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை
x
தேர்தலில் பல ஆண்டுகளாக போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை வழங்குமாறு, மத்திய சட்டத் துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. 2021 மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவில் 2 ஆயிரத்து 700 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளன. இவற்றில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் எண்ணிக்கை 7. மற்றும், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் எண்ணிக்கை 50. 2010ம் ஆண்டு, ஆயிரத்து 112ஆக இருந்த பதிவு செய்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை, தற்போது 2 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது.

இவற்றில் ஏறத்தாழ 400க்கும் மேற்பட்ட கட்சிகள், பல ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடவில்லை என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வருமான வரி சலுகை பெற்றுள்ள இத்தகைய கட்சிகள் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசியல் கட்சியாக பதிவு செய்து, ஆனால் நீண்ட ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யவோ, அல்லது நடவடிக்கை எடுக்கவோ தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் என மத்திய சட்டத் துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்