காற்று மாசுபாடு பற்றிய புதிய ஆய்வு - காற்று மாசுபாட்டால் தவிக்கும் வட மாநிலங்கள்

காற்று மாசுபாடு காரணமாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சராசரி ஆயுட்காலம் 9 ஆண்டுகள் வரை குறைந்திருப்பதாக சிகாகோ பல்கலைக்கழக ஆய்வு முடிவு கூறியிருக்கிறது.
x
காற்று மாசுபாடு காரணமாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சராசரி ஆயுட்காலம் 9 ஆண்டுகள் வரை குறைந்திருப்பதாக சிகாகோ பல்கலைக்கழக ஆய்வு முடிவு கூறியிருக்கிறது.இந்தியாவில் 40 சதவீத மக்கள் அதிகளவு காற்று மாசு கொண்ட வட இந்திய பகுதிகளில் வாழ்கின்றனர். இதில் டெல்லியில் காற்று மாசு காரணமாக மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 9 புள்ளி 7 ஆண்டுகள் வரை குறைந்திருப்பதாக சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவில் தெரிய வந்திருக்கிறது.சுத்தமான காற்றை சுவாசித்தால் எவ்வளவு அதிக காலம் மனிதர்கள் உயிர் வாழ முடியும் என்கிற அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இந்தியாவின் வட மாநிலங்களில் காற்று மாசு வெகுவாக அதிகரித்திருப்பதாக கூறுகிறது.காற்று மாசுவினால் டெல்லிக்கு அடுத்தபடியாக உத்தரபிரதசத்தில் 9 புள்ளி 5 ஆண்டுகளும், பீகாரில் 8 புள்ளி 8 ஆண்டுகளும், ஹரியானாவில் 8 புள்ளி 4 ஆண்டுகளும் சராசரி ஆயுட்காலம் குறைவதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.2019-ஆம் ஆண்டில், இந்தியாவின் சராசரி காற்று மாசு ஒரு கன மீட்டருக்கு 70 புள்ளி 3 மைக்ரோகிராமாக இருந்ததாகவும், இது பிற உலக நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் மோசமான நிலை எனவும் தெரியவந்திருக்கிறது. 2000-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், ​மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 2019-ஆம் ஆண்டு காற்று மாசு அதிகரித்து, 2 புள்ளி 9 ஆண்டுகள் வரை சராசரி ஆயுட்காலத்தை குறைத்திருக்கிறது. வட இந்தியா மட்டுமின்றி ஆசியாவில் வங்கதேசம், பாகிஸ்தான், நேபால் ஆகிய நாடுகளும் அதிக மாசடைந்த நாடுகளின் பட்டியலில் உள்ளன.



Next Story

மேலும் செய்திகள்