"யூடியூப் சேனல்களில் பொய்யான செய்தி" - உச்ச நீதிமன்றம் கவலை

செய்தி இணையதளங்களில் பொய்யான செய்திகள் வெளியிடப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
யூடியூப் சேனல்களில் பொய்யான செய்தி - உச்ச நீதிமன்றம் கவலை
x
நிஜாமுதீன் மார்காஸ் விவகாரம் மதவாதம் ஆக்கப்படுவதை தடுக்கக் கோரி, ஜமி அத்- உலேமா- ஏ- ஹிந்த் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, யூடியூப் சேனல்கள், செய்தி இணையதளங்களில் பொய்யான செய்திகள் வெளியிடுவது கவலை அளிப்பதாக தெரிவித்தார். 

அதிகாரமிக்கவர்களின் கருத்துக்களை மட்டுமே அவை எதிரொலிப்பதாகவும், நீதிமன்றங்கள், நீதிபதிகளுக்கு எதிரான கருத்துக்கள் பதிவிடுவதாகவும் குறிப்பிட்டார்.

மதச் சாயம் பூசப்பட்டு வெளியிடப்படும் செய்திகளால் தேசத்தின் நற்பெயருக்கு களங்கள் ஏற்படும் என தெரிவித்த தலைமை நீதிபதி, 

இதுபோன்ற யூடியூப் சேனல்களை முறைப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்துள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இவை கையாளப்படும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்