குழந்தைகள் தடுப்பூசி - அடுத்தகட்ட ஆய்வு

குழந்தைகளுக்கான தடுப்பூசிகளின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள பயாலஜிக்கல்-இ நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.
x
ஐதராபாத்தை சேர்ந்த பயாலாஜிக்கல்-இ நிறுவனம், 5 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கான "கார்பிவேக்ஸ்" எனும் பெயரில் தடுப்பூசி தயாரித்துள்ளது. 

இந்த தடுப்பூசியின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது. 

மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஒப்புதலை இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் வழங்கியுள்ளது. 

தடுப்பூசியின் பாதுகாப்பு செயல்திறன், நோய் எதிர்ப்புத் தன்மை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 


நாடு முழுவதும் உள்ள 10 இடங்களில் இந்த சோதனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பாரத் பயோடெக், சீரம், ஜைடஸ் காடிலா (Zydus CADILLLA ) ஆகிய நிறுவனங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசியின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை ஏற்கனவே மேற்கொண்டு வருகின்றன.

இதில் 12 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்காக ஜைடஸ் காடிலா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்