கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் சாதனை : ஆகஸ்ட்டில் 19.27 கோடி டோஸ்கள்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் வெகுவாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் ஒரு கோடியே 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
x
இந்த ஆண்டு ஜனவரியில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்கியது.
ஜனவரியில் மொத்தம் 38 லட்சம் டோஸ்கள் அளிக்கப்பட்டன.
பிப்ரவரியில் 1.05 கோடி டோஸ்களும், மார்ச் மாதத்தில் 5.09 கோடி
டோஸ்களும், ஏப்ரலில் 8.68 கோடி டோஸ்களும் அளிக்கப்பட்டன.
மே மாதத்தில் 5.84 கோடி டோஸ்களும், ஜூனில் 11.88 கோடி
டோஸ்களும், ஜூலையில் 13.23 கோடி டோஸ்களும், ஆகஸ்டில்
19.27 கோடி டோஸ்களும் அளிக்கப்பட்டன 


செவ்வாய் அன்று இந்தியாவில் 1.33 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் அளிக்கப்பட்டு, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.


செப்டம்பர் ஒன்றாம் தேதி காலை வரை நாடு முழுவதும் மொத்தம் 65.41 கோடி
டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. 


இதுவரை 50.33 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 15.07 கோடி பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் அளிக்கப்பட்டுள்ளது.


சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் கோவிஷீல்ட் உற்பத்தி, ஆகஸ்ட்டில் 16.4 கோடி டோஸ்களாக அதிகரித்துள்ளதால், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் வேகமடைந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்