2-வது அலையில் புதிய வகை டெல்டா வைரஸ் பாதிப்பு - கேரளாவில் அதிகரிப்பு

கொரோனாவின் டெல்டா பிளஸ் ஏஒய்-1 வகை வைரஸ் கேரளா மாநிலத்தை மிரட்டி வருகிறது.
2-வது அலையில் புதிய வகை டெல்டா வைரஸ் பாதிப்பு - கேரளாவில் அதிகரிப்பு
x
கொரோனாவின் டெல்டா பிளஸ் ஏஒய்-1 வகை வைரஸ் கேரளா மாநிலத்தை மிரட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில்  புதிய வகை டெல்டா வைரஸ் பாதிப்பு கேரளாவில் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், டெல்டா ஏஒய்-1 வகை வைரஸ் எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா மற்றும் திருவனந்தபுரம் என ஐந்து மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இவ்வகை வைரஸ் பாதிப்பு  கேரளாவில் தான் மிக அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது.ஆகஸ்ட் மாதத்தில் சோதனை செய்யப்பட்ட 909 மாதிரிகளில், 424 மாதிரிகள் டெல்டா பிளஸ் ஏஒய் 1 முதல் ஏஒய் 25 வரை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.கேரளாவில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஏஒய்-1 வைரஸ் பாதிப்பு 6 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. சிஎஸ்ஐஆரின் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் (ஐஜிஐபி) நடத்திய ஆய்வின்படி இது தெரியவந்துள்ளது. இவ்வகை வைரஸ் ஐந்து சதவீதத்திற்கு மேல் கண்டறியப்பட்டது கேரளாவில் மட்டும் தான் எனவும் கூறப்படுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்