270 சுளுக்கி ஆயுதங்கள் பறிமுதல்; 3 மீனவர்கள் கைது - தீவிர விசாரணை

புதுச்சேரியில் மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு பயன்படுத்த 270 சுளுக்கி ஆயுதங்களை தயாரித்த பட்டறை உரிமையாளர் உட்பட மூன்று மீனவர்களை போலீசார் கைது செய்தனர்.
270 சுளுக்கி ஆயுதங்கள் பறிமுதல்; 3 மீனவர்கள் கைது - தீவிர விசாரணை
x
புதுச்சேரியில் மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட  மோதலுக்கு பயன்படுத்த 270 சுளுக்கி ஆயுதங்களை தயாரித்த பட்டறை உரிமையாளர் உட்பட மூன்று மீனவர்களை போலீசார் கைது செய்தனர்.முதலியார்பேட்டை சிவா விஷ்ணு நகரில் இயங்கி வரும் பட்டறை ஒன்றில் சுளுக்கிகள் தயாரிப்பதாக போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது.   தகவலின் பேரில் பட்டறைக்கு சென்று சோதனை செய்த போலீசார் அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த 270 சுளுக்கி ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். அதனை மறைத்து வைத்த நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது மோதல் நடந்தால் எதிர் தரப்பினரை தாக்கவே இந்த சுளுக்கிகளை செய்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கைது  செய்யப்பட்டவர்கள் மீது ஆயுதம் வைத்திருந்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் இனியன் உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்