பசுவை தேசிய விலங்காக அறிவிக்க உத்தரவு
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தரபிரதேசத்தில் பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் ஜாமின் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேகர் யாதவ், இந்திய காலாச்சாரத்தில் ஒருங்கிணைந்த பகுதியாக பசுக்கள் இருப்பதாகவும், அவை, இந்திய கலாசாரத்தின் அடையாளமாக விளங்குவதாகவும் தெரிவித்தார்.எனவே, பசுக்களை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மத்திய அரசு பசுக்களுக்கு அடிப்படை உரிமை வழங்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்த நீதிபதி, பசுக்களை கொடுமைப்படுத்துவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் பிரிவுகள் சட்டத்தில் இடம் பெறவேண்டும் எனவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.பசு பாதுகாப்பு என்பது ஒரு மதத்தினரின் பணி மட்டுமல்ல, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கருத்து தெரிவித்த அவர், பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Next Story