தென் ஆப்பிரிக்காவில் சி1 வைரஸ்: 8 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு சோதனை - கேரள அரசு

தென் ஆப்பிரிக்காவில் புதிய வகையான சி1 வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்கா உட்பட எட்டு நாடுகளிலிருந்து வருபவர்களை விமான நிலையங்களில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சி1 வைரஸ்: 8 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு சோதனை - கேரள அரசு
x
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகையான சி1 வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்கா உட்பட எட்டு நாடுகளிலிருந்து வருபவர்களை விமான நிலையங்களில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.  கேரளாவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கேரள அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் படி, சி ஒன், வைரஸ் குறித்து, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேரள அரசு முடிவு செய்துள்ளது. விமான நிலையங்களில் வரும் பயணிகளுக்கு சிறப்பு பரிசோதனை மேற்கொள்ளவும் தென்னாப்பிரிக்கா உட்பட எட்டு நாடுகளிலிருந்து வருபவர்களை  தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு விரைவில் தடுப்பு மருந்து செலுத்தவும் முடிவு செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்