தமிழக கிராமத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு

கழிவுகளையும் செல்வமாக மாற்ற முடியும் என்பதற்கு, தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காஞ்சிரங்கால் கிராமம் உதாரணமாகத் திகழ்வதாக பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.
தமிழக கிராமத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு
x
மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, நான்கு தசாப்தங்களுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கியில் நமது வீரர் வீராங்கனைகள் திறமையை நிரூபித்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார் இந்த தருணத்தில் தியான் சந்தின் ஆன்மா மகிழ்ச்சியில் திளைக்கும் என அவர் குறிப்பிட்டார். இளைஞர்களிடம் விளையாட்டு மீதான ஆர்வத்தையும் பெருமளவில் பார்க்க முடிவதாக கூறிய பிரதமர் மோடி, ஒவ்வொரு குடும்பமும் விளையாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கிராமத்திலும் தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

நமது பண்டிகைகளையும், அதன் பின்னால் உள்ள அறிவியலையும் அறிந்து கொண்டு கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, அதனை அடுத்த தலைமுறையினருக்கும் நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என குறிப்பிட்டார் சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராமத்தில் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுவதை பாராட்டிய பிரதமர் மோடி, இந்த சிறிய பஞ்சாயத்து ஒட்டு மொத்த கிராமங்களுக்கும் முன்மாதிரியாக திகழ்வதாக புகழாரம் சூட்டினார்.

நாட்டில் 62 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர், இருப்பினும் தொடர்ந்து மக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கொரோனா காலக்கட்டத்தில் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு குறைந்திருப்பதாகவும், இதனை மழுங்கிவிட நாம் அனுமதித்து விடக்கூடாது எனவும் பிதமர் மோடி குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்