பிறந்த 4 நாட்களே ஆன குழந்தை கடத்தல் - சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை

ஆந்திராவில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தை கடத்தப்பட்டது.
பிறந்த 4 நாட்களே ஆன குழந்தை கடத்தல் - சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை
x
ஆந்திராவில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தை கடத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மார்காபுரம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் கோமதி தம்பதிக்கு கடந்த 24 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு ஏற்பட்டதன் காரணாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்தே 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த‌து. இந்த நிலையில், கோமதி மதியம் உணவு அருந்த சென்ற நேரத்தில்  குழந்தை மாயமாகியுள்ளது. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, பெண் ஒருவர் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்