"பொதுமக்கள் அதிக அளவு கூடுவதை மாவட்ட நிர்வாகம் கட்டாயம் தடுக்க வேண்டும்" - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்

கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கேரள மாநில தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பொதுமக்கள் அதிக அளவு கூடுவதை மாவட்ட நிர்வாகம் கட்டாயம் தடுக்க வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்
x
அந்த கடிதத்தில்,  கொரோனா பாதிப்பில் கேரளா முதலிடத்தில் உள்ளது கவலைக்குரியது என கூறப்பட்டுள்ளது. 

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து தனிமைப்படுத்த வேண்டும். 


பொதுமக்கள் அதிக அளவு கூடுவதை மாவட்ட நிர்வாகம் கட்டாயம் தடுக்க வேண்டும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார். 


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதல் படி பரிசோதனையை மேலும் அதிகரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

குறிப்பாக டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் வைரஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்