வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியம் 30% அதிகரிக்க திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்

வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை, கடைசியாக பெற்ற சம்பளத்தில், 30 சதவீதமாக அதிகரிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
x
வங்கி ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் பயனடையும் வகையில், இந்திய வங்கிகளின் சங்கம் இந்த திட்டத்தை முன் வைத்துள்ளது. இந்நிலையில், இதை ஏற்று கொண்டுள்ள மத்திய அரசு, திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள நிதி சேவைகள் துறை செயலாளர், இந்த நடவடிக்கை மூலம், வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார். 
தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு ஊழியர்களின் பங்களிப்பை தற்போதுள்ள 10 சதவீதத்திலிருந்து, 14 சதவீதமாக உயர்த்தவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக செயலாளர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்