ரூ.4,553 கோடி கிரிப்டோ நாணயங்கள் திருட்டு : இணையதளத்தில் ஹேக்கர்கள் கைவரிசை

கிரிப்டோ நாணயத்தின் வரலாற்றில் நடந்த மிகப்பெரிய திருட்டை பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு...
ரூ.4,553 கோடி கிரிப்டோ நாணயங்கள் திருட்டு : இணையதளத்தில் ஹேக்கர்கள் கைவரிசை
x
தனியார் நிறுவனங்களினால் வெளியடப்படும் பிட்காயின் உள்ளிட்ட பல்வேறு கிரிப்டோ நாணயங்களின் மதிப்பு சமீப வருடங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது.

இவற்றை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் தளங்களில்
ஒன்றான அமெரிக்காவின் பாலி நெட் ஒர்க் தளத்தில் இருந்து செவ்வாய் அன்று, 4,553 கோடி ரூபாய் மதிப்புடைய எத்திரியம், பிஎஸ்சி, பாலிகன் கிரிப்டோ நாணயங்கள் ஹேக்கர்களினால் கொள்ளையடிக்கப்பட்டன

கிரிப்டோ நாணயங்கள் வரலாற்றில், இது தான் மிகப் பெரிய ஆன்லைன் திருட்டாக கருதப்படுகிறது. 

திருடப்பட்ட கிரிப்டோ நாணயங்களை திரும்பி அளிக்குமாறு பாலி நெட் ஒர்க் தளம், டிவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்தது.

இதைத் தொடர்ந்து சுமார் 1,930 கோடி ரூபாய் மதிப்பிலான
கிரிப்டோ நாணயங்களை, ஹாக்கர்கள் திருப்பி அனுப்பியுள்ளதாக
பாலி நெட் ஒர்க் தளம் புதன் அன்று தெரிவித்தது.

மீதமுள்ள 2,623 கோடி ரூபாய் மதிப்புடைய குரிப்டோ நாணயங்களையும் திரும்பப் பெற முயற்சி நடை பெற்று வருகிறது.

இவற்றை திருடினாலும், சர்வதேச சந்தையில் இவற்றை பணமாக மாற்றுவது மிக மிக கடினமான காரியமாக கருதப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்