மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் அமளி; "கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" - மத்திய அமைச்சர் கண்டனம்

மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் தவறான செயல்பாடுகளை விசாரிக்க சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி வலியுறுத்தி உள்ளார்.
மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் அமளி; கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சர் கண்டனம்
x
மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் தவறான செயல்பாடுகளை விசாரிக்க சிறப்பு குழுவை  அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி வலியுறுத்தி உள்ளார். மாநிலங்களவையில் கூட்டத் தொடரின் போது எதிர்கட்சி உறுப்பினர்கள் மேஜை மீது ஏறி நின்று முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து கருப்பு கொடி காண்பித்தனர். இதற்கு கடும் கண்டனம்  தெரிவித்துள்ள நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, அனைத்து வரம்புகளையும்  எதிர்கட்சியினர்  தாண்டி விட்டதாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அனுபவத்தில் இது போன்ற செயல்பாடுகளை பார்த்தது இல்லை எனவும் எதிர்க்கட்சியினரின் தவறான செயல்பாடுகளை விசாரிக்க சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்றும் மாநிலங்களவை தலைவரை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், சிசிடிவி காட்சிகளை பொதுவெளியில் வெளியிடுவதோடு,  ஒழுக்கமின்றி நடந்து கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்