ஜி.எஸ்.எல்.வி எஃப்-10-ல் தொழில்நுட்ப கோளாறு :"திட்டம் முழுமையாக வெற்றி பெறவில்லை" - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

இன்று அதிகாலை ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் முழுமையான அளவில் வெற்றி பெறவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறி உள்ளார்.
ஜி.எஸ்.எல்.வி எஃப்-10-ல் தொழில்நுட்ப கோளாறு :திட்டம் முழுமையாக வெற்றி பெறவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
x
2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட அதிநவீன ஈ.ஓ.எஸ் three என்ற புவி கண்காணிப்பு செயற்கை கோளுடன், இன்று அதிகாலை 5.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 36 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இந்த செயற்கைக் கோளை விஞ்ஞானிகள் நிலைநிறுத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால், ராக்கெட் பிரிவதற்கான மூன்றாவது கட்ட கிரையோஜெனிக் நிலையில் எதிர்பாராத விதமாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதனால், இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி எஃப்-10 திட்டம் முழுமையான அளவில் வெற்றி பெறவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்து உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்