பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி: 7 ஆண்டுகளில் ரூ.16.7 லட்சம் கோடி வசூல் - மாநிலங்களவையில் நிதி அமைச்சர் தகவல்
பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி விதிப்பு மூலம் 7 ஆண்டுகளில் 16 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் பெட்ரோலிய பொருட்களின் மீதான வரி விதிப்பின் மூலம் மத்திய அரசுக்கு 36 லட்சம் கோடி வரை வருமானம் கிடைத்ததாக மாநிலங்களவை உறுப்பினர் விஷம்பர் பிரசாத் தெரிவித்திருந்தார். இதற்கு மாநிலங்களவையில் விளக்கமளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2014-15 நிதியாண்டு முதல் 2020-21ம் நிதியாண்டு வரையிலான காலக்கட்டத்தில் பெட்ரோலிய பொருட்கள் மீது கலால் வரி உட்பட மொத்த வரியாக மத்திய அரசுக்கு 16 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் வசூலானதாக தெரிவித்துள்ளார். உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், இதர வளர்ச்சித் திட்ட செலவினங்களை சமாளிப்பதற்காகவும் வரி விதிக்கப்படுவதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
Next Story

