"பெகாசஸ் குறித்து விவாதம் வேண்டும்" - எதிர்கட்சியினரின் அமளியால் மாநிலங்களவை முடக்கம்

மாநிலங்களவை தொடங்கியதும் விவசாய சட்டம், பெகாசஸ் குறித்து விவாதிக்க நேரம் கேட்டு எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்றும் ஒத்தி வைக்கப்பட்டது.
பெகாசஸ் குறித்து விவாதம் வேண்டும் - எதிர்கட்சியினரின் அமளியால் மாநிலங்களவை முடக்கம்
x
காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடியதும் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் 2வது முறையாக வெண்கலம் வென்ற பிவி சிந்துவிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பரவல், விவசாய திருத்தச்சட்டம் மற்றும் பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி கேட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் அமளி ஏற்பட, மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அவைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு அறிவித்தார். முன்னதாக பழங்குடியினர் ஆணை திருத்த மசோதா மற்றும் உள்நாட்டு கப்பல் போக்குவரத்து மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.  கடந்த 19ம் தேதி நாடாளுமன்றம் தொடங்கியதில் இருந்து இதுவரை கணக்கிடப்பட்ட107 மணி நேரத்தில் 18 மணி நேரம் மட்டுமே அவை இயங்கியதும்,  இரு அவைகளும் தொடர்ந்து முடங்குவதால் 133 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்