"நாடாளுமன்ற முடக்கம் - மத்திய அரசே பொறுப்பு": மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர்

நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கினால் அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பாகும் என்று மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற முடக்கம் - மத்திய அரசே பொறுப்பு: மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர்
x
 பெகாசஸ் விவகாரத்தால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்குவது குறித்து பேசிய மல்லிகார்ஜூன் கார்கே, பெகாசஸ் விவாதம் நடந்தால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதால் அதனை மத்திய அரசு தவிர்ப்பதாக கூறினார். மசோதாக்களை கேள்விகளின்றி அப்படியே நிறைவேற்ற மத்திய அரசு  விரும்புவதாக குற்றம்சாட்டிய அவர், பணவீக்கம், கொரோனா, எரிபொருள் விலை உயர்வு, ரஃபேல் போன்றவற்றின் பிரச்சனைகளை மறைக்க முயற்சிப்பதாக தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்