தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஏ-பிரிவு வழக்கு - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு
தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஏ- பிரிவு செல்லாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவது மாநில அரசுகளின் அடிப்படை பொறுப்பு என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஏ- பிரிவு செல்லாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவது மாநில அரசுகளின் அடிப்படை பொறுப்பு என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பியுசிஎல்) தேசிய பொதுச் செயலாளரான சென்னையைச் சேர்ந்த வி.சுரேஷ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எஃப். நரிமன் தலைமையிலான அமர்வு கடந்த ஜூலை 5-ந் தேதி விசாரித்தது.இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், அரசியலமைப்பு சட்டத்தின்படி காவல்துறை, பொது ஒழுங்கு மாநில அரசு பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் படி, தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஏ- பிரிவு செல்லாது என்ற உச்சநீதிமன்றத்தின் ஷ்ரேயா சிங்கல் வழக்கின் தீர்ப்பை அமல்படுத்துவதில் மாநில காவல்துறைக்கும் சமமான பொறுப்புள்ளது என அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story