காட்டாற்று வெள்ளத்தால் கடும் பாதிப்பு : அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள் - பார்வையிட்ட முதல் மந்திரி
இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு இடங்களை அம்மாநில முதல் மந்திரி பார்வையிட்டார்.
இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு இடங்களை அம்மாநில முதல் மந்திரி பார்வையிட்டார். லஹவுல் மற்றும் ஸிபிதி பகுதிகளில், கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக திண்டி என்ற இடத்தில் காட்டாற்று வெள்ளத்தால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. உயிரைப் பணயம் வைத்து மீட்புப்படையினர் மக்களை மீட்டனர். இந்நிலையில், அம்மாநில முதல் மந்திரி ஜெய் ராம் தாகூர், வெள்ள பாதிப்பு இடங்களைப் பார்வையிட்டார். மேலும், லாஹவுல் பள்ளத்தாக்கு பகுதியைக் கடும் சேதத்திற்குள்ளாக்கிய காட்டாற்று வெள்ளம், 6 பாலங்களை சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
Next Story