கொரோனா தடுப்பூசி: டாப் 10 மாநிலங்கள் - 9வது இடத்தில் தமிழகம்

தடுப்பூசி செலுத்துவதில் முதல் பத்து இடங்களில் உள்ள மாநிலங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம். ஏழாவது இடத்தில் இருந்த மத்திய பிரதேசம், ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
x
நாடு முழுவதும், ஜூலை 31 காலை வரை 46.15 கோடி தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.  35 கோடியே 98 லட்சம் பேருக்கு முதல் டோஸும், 10 கோடியே 16 லட்சம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 26.07 சதவீதமாக உள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 7.36 சதவீதமாக உள்ளது. 24 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில் 4 கோடியே 76 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.12 கோடியே 43 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் இதுவரை 4 கோடியே 37 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 6 கோடியே 43 லட்சம் மக்கள் தொகை கொண்ட குஜராத்தில், இதுவரை 3 கோடியே 29 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 8 கோடியே 25 லட்சம் மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தானில் இதுவரை 3 கோடியே 20 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 8 புள்ளி 7 கோடி மக்கள் தொகை கொண்ட மத்திய பிரதேசத்தில், இதுவரை 3 கோடியே 09 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 6 கோடியே 83 லட்சம் மக்கள் தொகை கொண்ட கர்நாடகாவில், இதுவரை 3 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 10 கோடி மக்கள் தொகை கொண்ட மேற்கு வங்கத்தில், இதுவரை 2 கோடியே 91 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.12 புள்ளி 7 கோடி மக்கள் தொகை கொண்ட பீகாரில், இதுவரை 2 கோடியே 39 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 7 கோடியே 85 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில்,  இதுவரை 2 கோடியே 26 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 5 கோடியே 44 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஆந்திராவில், இதுவரை 2 கோடியே 14 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  

Next Story

மேலும் செய்திகள்