ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம் - ஸ்டெர்லைட் ஆலை நடவடிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதி முடிவடைந்ததையடுத்து ஆக்சிஜன் உற்பத்தியை தொழிற்சாலை நிர்வாகம் நிறுத்தியுள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம் - ஸ்டெர்லைட் ஆலை நடவடிக்கை
x
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையானது தூத்துக்குடி மக்களின் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு கடந்த 2018-ம் ஆண்டு பூட்டி சீல் வைக்கப்படது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உருவான கொரொனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் கூடத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில்  உச்ச நீதிமன்றம் கொடுத்த அனுமதி நிறைவடைந்ததையடுத்து ஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நிறுத்தியுள்ளது. கடந்த 4 மாதத்தில் 2 ஆயிரத்து 132 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்