ஜார்க்கண்டில் நடைபயிற்சி மேற்கொண்ட நீதிபதி கொலை - சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி சம்பவம்

ஜார்க்கண்டில் நடைபயிற்சி மேற்கொண்ட மாவட்ட நீதிபதி விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டில் நடைபயிற்சி மேற்கொண்ட நீதிபதி கொலை - சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி சம்பவம்
x
ஜார்க்கண்டில் நடைபயிற்சி மேற்கொண்ட மாவட்ட நீதிபதி விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

சாலையோரத்தில் நடைபயிற்சி மேற்கொள்பவரை, அவ்வழியே வரும் வாகனம் ஒன்று வேகமாக இடித்துச் செல்லும் அதிர்ச்சிகரமான இந்த சிசிடிவி காட்சி ஜார்க்கண்ட் மாநிலம் தான்பத்தில் பதிவானது...

ஆட்டோ இடித்ததும் நிலைத்தடுமாறி விழுந்தவரை அப்பகுதியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.  

ஒருபுறம் உயிரிழந்தவர் யார் என போலீசார் விசாராணையை தொடங்கிய நிலையில், மறுபுறம் அவரை காணவில்லை என அவரது குடும்பத்தார் போலீசாரை நாடியுள்ளனர். 

அப்போதுதான் உயிரிழந்தவர் அம்மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த் என்பதும் தெரியவந்துள்ளது.

நீதிபதி விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போதுதான் உத்தம் ஆனந்தை வாகனம் ஒன்று இடித்துச் செல்லும் காட்சி கிடைத்து உள்ளது.

3 சக்கர வாகனத்தை ஓட்டியவர் வேண்டுமென்றே இடதுபுறமாக சென்று உத்தம் ஆனந்தை இடித்துவிட்டு நிதானமாக செல்வது தெளிவானது. 

உடனடியாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை விஸ்தரித்த போது, மோதிய வாகனம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக திருடப்பட்டது தெரியவந்தது.  

உச்சநீதிமன்றத்தில் இவ்விவகாரம்  எதிரொலித்த போது, தலைமை நீதிபதி ரமணா, இவ்வழக்கை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது எனக் கூறியிருக்கிறார்.

தான்பத்தில் மாபியா கொலை தொடர்பான பல வழக்குகளை விசாரித்த நீதிபதி உத்தம் ஆனந்த், சமீபத்தில் 2 ரவுடிகளுக்கு ஜாமீன் வழங்க மறுத்திருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. 

கொளையாளிகளை பிடிக்க முயற்சித்துவரும் போலீசார், அவர் விசாரித்த வழக்குகள் தொடர்பான தகவல்களையும் சேகரித்து வருகிறார்கள். 


Next Story

மேலும் செய்திகள்