பெகாசஸ், வேளாண் சட்டம் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளி - தொடர்ந்து 9வது நாளாக மாநிலங்களவை முடக்கம்

மாநிலங்களவையில் அமளியில் எதிர்கட்சியினர் ஈடுபட்டு வரும் நிலையில் அவையின் பொறுமையை களைப்படையச் செய்யும் விதத்தில் உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டாம் என வெங்கைய்யா நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
பெகாசஸ், வேளாண் சட்டம் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளி - தொடர்ந்து 9வது நாளாக மாநிலங்களவை முடக்கம்
x
இன்று காலை மாநிலங்களவை தொடங்கியதும் பெகாசஸ் தொடர்பாக விளக்கம் அளிக்க பிரதமரும், உள்துறை அமைச்சரும் முன் வர வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்கட்சிகள் குரலெழுப்பியதால்12 மணி வரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு  மீண்டும் அவை கூடியம் இதே பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பியால் பிற்பகல் 2.30 மணி வரை மாநிலங்களவை மீண்டும்  ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக பேசிய வெங்கைய்யா நாயுடு அவையில் கைத்தட்டுவது, முழக்கம் எழுப்புவது, அமைச்சர்கள் முன்பு பதாகைகளை ஏந்தி அவர்களை மறைப்பது போன்ற செயல்களில் அவை உறுப்பினர்கள் ஈடுபடுவது கண்ணியத்திற்கு புறம்பானது என்றதுடன், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்