கோவாவில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் : "ஒரு தந்தையாகவே அந்த கருத்தை கூறினேன்"- விளக்கம் அளித்த முதலமைச்சர் ப்ரமோத் சாவந்த்

கோவாவில் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவத்தில் முதலமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஒரு தந்தையாகவே அந்த கருத்தை கூறினேன் என அவர் விளக்கமளித்துள்ளார்.
கோவாவில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் : ஒரு தந்தையாகவே அந்த கருத்தை கூறினேன்- விளக்கம் அளித்த முதலமைச்சர் ப்ரமோத் சாவந்த்
x
கோவாவில் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவத்தில் முதலமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஒரு தந்தையாகவே அந்த கருத்தை கூறினேன் என அவர் விளக்கமளித்துள்ளார். கோவாவில் சமீபத்தில் கடற்கரையில் 2 சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், நள்ளிரவில் கடற்கரையில் சிறுமிகளுக்கு என்ன வேலை? என முதலமைச்சர் ப்ரமோத் சாவந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சூழலில் 14 வயதுள்ள ஒரு மகளின் தந்தையாகவே இந்த கருத்தை கூறினேன் என்றும், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் முதலமைச்சர் ப்ரமோத் சாவந்த் விளக்கம் அளித்துள்ளார். குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோருக்கும் அதீத பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Next Story

மேலும் செய்திகள்