மேகதாது அணை திட்டம் "விரைந்து நிறைவேற்ற வேண்டும்" - ஆளுநர் தாவர் சந்த்திடம் குமாரசாமி கடிதம்

மேகதாது அணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்த கோரி கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, தனது கட்சி எம்எல்ஏக்கள் உடன் சென்று ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் கடிதம் அளித்துள்ளார்.
மேகதாது அணை திட்டம் விரைந்து நிறைவேற்ற வேண்டும் - ஆளுநர் தாவர் சந்த்திடம் குமாரசாமி கடிதம்
x
மேகதாது அணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்த கோரி கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, தனது கட்சி எம்எல்ஏக்கள் உடன் சென்று ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் கடிதம் அளித்துள்ளார். ஆளுநரிடம் வழங்கிய கடிதத்தில், கர்நாடகாவில் உள்ள மற்ற நதிநீர் பிரச்சனைகளுக்கும் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 
மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையில் அவரது கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்த திட்டத்தின் பயன்கள் எடுத்துரைக்கும் அனுமதியை பெறுவோம் என தெரிவித்தார்.
 


Next Story

மேலும் செய்திகள்