சாலையை ஒரே சீராக கடந்த 3000 க்கும் மேற்பட்ட புல்வாய் இன மான்கள்

குஜராத்தின் பாவ்நகரில் உள்ள தேசிய பூங்காவில், பிளாக்பக் எனும் புல்வாய் இன மான்கள் சாலையை கடந்து செல்லும் வீடியோ ஒன்றை, பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
சாலையை ஒரே சீராக கடந்த 3000 க்கும் மேற்பட்ட புல்வாய் இன மான்கள்
x
குஜராத்தின் பாவ்நகரில் உள்ள தேசிய பூங்காவில், பிளாக்பக் எனும் புல்வாய் இன மான்கள் சாலையை கடந்து செல்லும் வீடியோ ஒன்றை, பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். பாவ்நகரில் பிளாக்பக் தேசிய பூங்கா அமைந்துள்ளது. அங்கு 3000க்கும் மேற்பட்ட புல்வாய் இன மான்கள் சாலையை ஒரே நேரத்தில், ஒன்றாக அணிவகுத்து, ஒரே சீராக கடந்து சென்றது. துள்ளியோடு மான்களின் இந்த காட்சியை குஜராத் மாநில அரசு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. இந்நிலையில், அந்த வீடியோவை "அருமை" என்ற தலைப்புடன், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 


Next Story

மேலும் செய்திகள்