இந்திய துறைமுகங்கள் மசோதா ஆலோசனையில் உள்ளது - மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்

மத்திய அரசு அறிவித்திருந்த இந்திய துறைமுகங்கள் மசோதா 2021 ஆலோசனை கட்டத்தில் இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய துறைமுகங்கள் மசோதா ஆலோசனையில் உள்ளது - மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்
x
மத்திய அரசு அறிவித்திருந்த இந்திய துறைமுகங்கள் மசோதா 2021 ஆலோசனை கட்டத்தில் இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் பதிலளித்து பேசினார். அப்போது, இந்திய துறைமுகங்கள் மசோதா- 2021 குறித்து மாநில அரசுகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கருத்து தெரிவிக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சிலர் கருத்துக்களை பதிவு செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா -2020 ல் உள்ள கருத்துகள் மற்றும் பரிந்துரைகள், மசோதா-2021 இல் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்