கூடங்குளம் : 5வது அணு உலை - தற்போதைய நிலை என்ன? - அமைச்சர் ஜித்தேந்திர சிங் விளக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 5 மற்றும் 6வது அணு உலை பணிகள் நடைபெற்று வருவதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜித்தேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
கூடங்குளம் : 5வது அணு உலை - தற்போதைய நிலை என்ன? - அமைச்சர் ஜித்தேந்திர சிங் விளக்கம்
x
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 5 மற்றும் 6வது அணு உலை பணிகள் நடைபெற்று வருவதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜித்தேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். தமிழகத்தில் நிறுவப்படுவதாக முன்மொழியப்பட்ட கூடங்குளத்தின் 5வது அணு உலையின் தற்போதைய நிலை என்ன என்று தேனி எம்.பி. ரவீந்திரநாத் கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்து பூர்வமாக பதிலளித்த அமைச்சர் ஜித்தேந்திர சிங், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 5 மற்றும் 6வது அணு உலைக்கான முதற்கட்ட பணிகள் ஜூன் 29ம் தேதி தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். கூடங்குளம் சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு வளர்ச்சி அடைய விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, சிஎஸ்ஆர் எனும் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.  மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலையத்தில் இந்திய அணுமின் நிலைய நடவடிக்கை செயல்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சரின் பதிலில் கூறப்பட்டிருந்தது.



Next Story

மேலும் செய்திகள்