6 வயது மகளை துன்புறுத்திய தந்தை - படிக்காததால் அடித்து தந்தை கொடுமை

கேரளா மாநிலம் கொச்சி அருகே சரியாக படிக்காத தனது ஆறு வயது மகளை அடித்து துன்புறுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
6 வயது மகளை துன்புறுத்திய தந்தை - படிக்காததால் அடித்து தந்தை கொடுமை
x
கேரளா மாநிலம் கொச்சி அருகே சரியாக படிக்காத தனது ஆறு வயது மகளை அடித்து துன்புறுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.கொச்சி அருகே உள்ள தோப்பம்பாடி பகுதியை சேர்ந்த ரோஜன் சேவியர், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், மகள் சரியாக படிப்பதில்லை என கூறி, ரோஜன் அவரை பல நாட்களாக கரும்பால் அடித்து கொடுமை படுத்தியுள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் சைல்ட் லைனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து சைல்ட்லைன் அமைப்பினர் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் உடல் முழுவதும் காயம் ஏற்பட்ட வடு இருந்துள்ளது. இதையடுத்து, சிறுமையை மீட்டு, குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் சேர்ந்த அதிகாரிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்து, ரோஜன் சேவியரை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்