ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பிற்கு 5 பேர் பலி, 40 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மேகவெடிப்பு ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 40 பேர் மாயமானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பிற்கு 5 பேர் பலி, 40 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்
x
ஜம்மு மற்றும் காஷ்மீரில் மேகவெடிப்பு ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 40 பேர் மாயமானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.  கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான ஹான்சர் பகுதியில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டதில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் 9 வீடுகள் சேதமடைந்தன. இந்த மேகவெடிப்பால் ஒரே நேரத்தில் கொட்டிய மழைக்கு 5 பேர் உயிரிழந்த நிலையில் 30க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று கூறப்படுகிறது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்