அமளிக்கு இடையே கேள்வி நேரம் - கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்கள்

தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் முடங்கியது.
அமளிக்கு இடையே கேள்வி நேரம் - கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்கள்
x
காலை 11 மணிக்கு மக்களவை தொடங்கியதும், விவசாயிகள் போராட்டம், பெகாசஸ் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கட்சி உறுப்பினர்கள் பேச தொடங்கினர். அமளிக்கு இடையே, ஆக்சிஜன் தட்டுப்பாடு, ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது, மேற்கு வங்கத்தில் நிலக்கரி திருடப்படுவது உள்ளிட்ட உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி பதிலளித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் 79 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், தனியார் நிறுவனங்கள் மூலம் நிலக்கரி எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.  இதேபோன்று பல்வேறு கேள்விகளுக்கும் அமைச்சர்கள் பதிலளித்தனர்.  இதனிடையே தொடர் அமளி காரணமாக அவை முடங்கியது. மாநிலங்களவையிலும் தொடர் அமளியால் கூச்சல் குழப்பம் நிலவியது....


Next Story

மேலும் செய்திகள்