"இளைஞர்களின் கனவு நாயகன்" அப்துல் கலாம் நினைவு தினம்

மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், இளைஞர்களின் கனவு நாயகனுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இளைஞர்களின் கனவு நாயகன் அப்துல் கலாம் நினைவு தினம்
x
மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், இளைஞர்களின் கனவு நாயகனுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தலைசிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்த அப்துல் கலாம், பின்பு 2002-இல் இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பொன்மொழிகளாலும், வழிகாட்டுதல்களாலும் இளைய தலைமுறையினரின பேராசானாக விளங்கினார் அப்துல் கலாம்.

நிஜத்தில் வெற்றி அடைய வேண்டுமென்றால் முதலில் "கனவு காணுங்கள்" என்கிற அவரது புகழ்பெற்ற வாசகம், இளைஞர்களின் தாரக மந்திரமாக மாறியது. 2020-இல் இந்தியா வல்லரசாக மாற வேண்டுமென்கிற இலக்கை நோக்கி தேசத்தை வழிநடத்திய அப்துல் கலாமின் சிந்தனை, என்றென்றும் இந்நாட்டின் வளர்ச்சியில் இடம்பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 

இளைஞர்களின் மேம்பாடு, நாட்டின் வளர்ச்சி மட்டுமின்றி, அரசியல் தளத்தில் அப்துல் கலாம் கூறிய கருத்துளும் இன்று வரை நடைமுறைக்கு பொருத்தமாக இருப்பது அவரது சிறப்பை பறைச்சாற்றுகிறது.

தனது உதவியாளருடனான கடைசி உரையில் கூட, தொடர் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியிருந்தது குறித்து அப்துல் கலாம் கவலையை வெளிப்படுத்தியிருந்தார். அப்துல் கலாமின் சிந்தைனைகள் தொலைநோக்கு பார்வையுடன், எப்போதும் நிலைத்திருக்கும் என்பதற்கு தற்போதைய நாடாளுமன்ற சூழல்
ஒரு சான்று.

கொரோனா ஊரடங்கால் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, ராமேஸ்வரத்திலுள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில்,
பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் அங்கு பலர் அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்