100 நாள் வேலைத் திட்டம் : "வேலை நாட்களை அதிகரிக்கும் திட்டம் இல்லை" - மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி

மகாத்மா காந்தியின் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நாட்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிடவில்லை என மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலைத் திட்டம் : வேலை நாட்களை அதிகரிக்கும் திட்டம் இல்லை - மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி
x
மகாத்மா காந்தியின் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நாட்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிடவில்லை என மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் தெரிவித்துள்ளார். மதுரை எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் எழுப்பியிருந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் பதிலளித்தார். இருப்பினும், மாநில அரசுகள் வேலை நாட்களின் எண்ணிக்கையை 100 நாட்களுக்கு மேல் அதிகரித்து வழங்கலாம் என்றும் அவர் கூறினார். மேலும், இயற்கை பேரிடர் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில், கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்