பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் ம‌ம்தா பானர்ஜி

மேற்குவங்க முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேச உள்ளார்.
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் ம‌ம்தா பானர்ஜி
x
மூன்று நாள் பயணமாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நேற்று மாலை டெல்லி வந்தடைந்தார். மூன்றாவது முறையாக பதவியேற்ற பின் மம்தா பானர்ஜி டெல்லி செல்வது இதுவே முதல்முறை. இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், மேற்குவங்கத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து பேச உள்ளார். இதைத்தொடர்ந்து பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தவும்  திட்டமிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்