மகாராஷ்டிரா வெள்ளம் - நிலச்சரிவு பகுதிகளில் சடலங்கள் மீட்பு

மகாராஷ்டிராவில் பெய்த வரலாறு காணாத மழையால் நேரிட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்து உள்ளது.
மகாராஷ்டிரா வெள்ளம் - நிலச்சரிவு பகுதிகளில் சடலங்கள் மீட்பு
x
மகாராஷ்டிராவில் பெய்த வரலாறு காணாத மழையால் நேரிட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்து உள்ளது. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொங்கன் பகுதியில் மீட்பு பணியில் முப்படையினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.வெள்ளம்... வீடுகளுக்குள் தண்ணீர்... வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் என எங்கு திரும்பினாலும் சோக முகமாக காட்சியளிக்கிறது மகாராஷ்டிராவின் ரத்னகிரி, ராய்காட், சத்தாரா, கோலாப்பூர் மாவட்டங்கள்....மகாராஷ்டிராவில் பெய்து வரும் பருவமழை கடந்த புதன் முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாட்கள் கோரமுகத்தை காட்டியது. கொங்கன் பகுதி மாவட்டங்கள் மற்றும் மேற்கு மராட்டிய மாவட்டங்களில் இந்த கனமழை இடைவிடாமல் கொட்டித்தீர்த்தது. 
பேய் மழையால் கிருஷ்ணா, பஞ்சகங்கா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி கரைபுரண்டு ஓடின. கொய்னா உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதும் நகர்ப்புறங்கள், கிராம புறங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, புனே, நாக்பூர் போன்ற மாவட்டங்கள் வெள்ளத்தால் பேரழிவை சந்தித்தன.


Next Story

மேலும் செய்திகள்