தண்ணீரில் தத்தளிக்கும் ஜுனாகட் நகர் - முழங்காலுக்கு மேல் தேங்கிய மழைநீர்

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக குஜராத் மாநிலம் ஜுனாகட் மாவட்டம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
தண்ணீரில் தத்தளிக்கும் ஜுனாகட் நகர் - முழங்காலுக்கு மேல் தேங்கிய மழைநீர்
x
தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக குஜராத் மாநிலம் ஜுனாகட் மாவட்டம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஜுனாகட் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கடை வீதிகள், சாலைகள், தெருக்கள் என எங்கு பார்த்தாலும் முழங்கால் அளவுக்கு மேல் மழைநீர் சூழ்ந்துள்ளது. கொட்டும் மழை மற்றும் வெள்ள பாதிப்பிலும் நடைபாதை வியாபாரிகள், விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். குஜராத்தின் மிக உயரிய மலையான கிர்னாரில் கனமழை வெளுத்து வாங்குகிறது. மிகவும் செங்குத்தான படிகளில் அதிகவேகத்தில் மழை வெள்ளம் பாய்ந்தோடுவதால், மலையில் இருந்து கீழே இறங்க முடியாமல் பக்தர்கள் தவிக்கின்றனர். கனமழை, வெள்ளத்தால் ஜுனாகட் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்