சமாஜ்வாடி- ஓவைசி கட்சி கூட்டணி விவகாரம் : முஸ்லிமுக்கு துணைமுதல்வர் பதவி கேட்கவில்லை - மஜ்லிஸ் கட்சி

இஸ்லாமியரை துணை முதல்வராக்குவதாக உறுதியளித்தால், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைப்பதாக வெளியாகும் செய்தி தவறானது என, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி தெரிவித்துள்ளது.
சமாஜ்வாடி- ஓவைசி கட்சி கூட்டணி விவகாரம் : முஸ்லிமுக்கு துணைமுதல்வர் பதவி கேட்கவில்லை - மஜ்லிஸ் கட்சி
x
இஸ்லாமியரை துணை முதல்வராக்குவதாக உறுதியளித்தால், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைப்பதாக வெளியாகும் செய்தி தவறானது என, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் தற்போதைய பாஜக அரசின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி குறித்து பேச்சு எழுந்துள்ளது. இதனிடையே, துணை முதல்வர் பதவியை இஸ்லாமியருக்கு தருவதாக இருந்தால், சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்ததாக வெளியாகும் பத்திரிகை செய்தியில் உண்மையில்லை என ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி மறுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்