நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்கள் உயிரிழப்பு.. பறவை காய்ச்சலா? என சந்தேகம்

நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்கள் உயிரிழப்பு.. பறவை காய்ச்சலா? என சந்தேகம்
நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்கள் உயிரிழப்பு.. பறவை காய்ச்சலா? என சந்தேகம்
x
நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்கள் உயிரிழப்பு.. பறவை காய்ச்சலா? என சந்தேகம் 

கேரளா மாநிலம் கொச்சி அடுத்த கலாமச்சேரியில்  100 க்கும் மேற்பட்ட வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.இதனால் அப்பகுதியில் பறவை காய்ச்சல் பரவி வருகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விவசாயி சம்சுதீன்  என்பவர் வாத்து பண்ணை வைத்துள்ள நிலையில் அங்கு, திடீரென 100- க்கும் மேற்பட்ட வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. உயிரிழந்த  வாத்துகளின் மாதிரிகளை ஆய்வு செய்ய கால்நடைத்துறையினர் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இந்த உயிரிழப்பிற்கு காரணம் பறவை காய்ச்சலா என சந்தேகம் எழுந்துள்ளது. உயிரிழந்த வாத்துக்களின் மாதிரிகள், திருவனந்தபுரம், ஆலப்பழாவில் உள்ள பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், ஒரு பரிசோதனை கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கோழிகள் இறந்ததற்கு பறவை  காய்ச்சல் தான் காரணம் என தெரிய வந்துள்ளது. மற்றொரு பரிசோதனை கூடத்தில்  நடத்தப்பட சோதனை பறவை காய்ச்சல் இல்லை என தெரிய வந்தது. இதையடுத்து, கூடுதல்  பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி   வைக்கப்பட்டுள்ளன இதில் பறவை காய்ச்சல் இல்லை என ஆய்வு முடிவில் தெரிய வந்தது. 

Next Story

மேலும் செய்திகள்