"முதலமைச்சர் பதவி விலகும் அவசியம் இல்லை" - பதவி விலகல் வதந்திக்கு எடியூரப்பா விளக்கம்

கர்நாடக முதலமைச்சர் பதவி ராஜினாமா செய்ய உள்ளதாக பரவி வரும் வதந்தி முற்றிலும் உண்மை இல்லை என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
x
மேகதாது அணை விவகாரத்தில் தீவிரம் காட்டி வரும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்பொழுது, மாநிலத்திற்கான திட்டங்கள் குறித்தும், மேகதாது அணைக்கான ஒப்புதல் குறித்தும் பேசியதாக கூறபடுகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக பரவிவரும் தகவலுக்கு எடியூரப்பா பதிலளித்துள்ளார். டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பதவி விலகலுக்கான எந்த அவசியமும் இல்லை எனவும் மேகதாது குறித்து மட்டுமே பிரதமரை சந்தித்தாகவும் தெரிவித்தார். கர்நாடக மாநில பாஜகவினர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில், பதவி விலகல் சர்ச்சைக்கு எடியூரப்பா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்