"எனக்கு எதிராக ஆதாரங்கள் உருவாக்குகின்றனர்" - லட்சத்தீவு போலீசார் மீது ஆயிஷா புகார்

தேசத் துரோக வழக்கில் தனக்கு எதிராக ஆதரங்களை உருவாக்க லட்சத்தீவு போலீசார் முயற்சிப்பதாக ஆயிஷா சுல்தானா குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனக்கு எதிராக ஆதாரங்கள் உருவாக்குகின்றனர் - லட்சத்தீவு போலீசார் மீது ஆயிஷா புகார்
x
தேசத் துரோக வழக்கில் தனக்கு எதிராக ஆதரங்களை உருவாக்க  லட்சத்தீவு போலீசார் முயற்சிப்பதாக ஆயிஷா சுல்தானா குற்றஞ்சாட்டியுள்ளார். 

கேரள மாநிலம் கொச்சியில், தேசத்துரோக வழக்கு தொடர்பாக ஆயிஷா சுல்தானா தங்கியிருந்த குடியிருப்புக்குள், கவரத்தி போலீசார் சோதனை நடத்தினர். பின்னர் லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு எதிராக ஆதரங்களை உருவாக்க  லட்சத்தீவு போலீசார் முயற்சிப்பதாக ஆயிஷா சுல்தானா குற்றச்சாட்டியுள்ளார். விசாரணையின் ஒரு பகுதியாக மடிக்கணிணியை ஆய்வு செய்வதில் தனக்கு எந்த சிரமமும் இல்லை என்றும், மடிக்கணிணி மற்றும் தனது செல்போனில் ஆதாரங்களை உருவாக்க கவரத்தி போலீசார் முயல்வதாக புகார் கூறியுள்ளார். ஆய்வுக்குப் பிறகு மடிக்கணினி மற்றும் மொபைல் போனைத் திருப்பித் தர வேண்டும் என்றும் ஆயிஷா தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்