சல்மான்கான் உட்பட 6 பேருக்கு போலீஸ் சம்மன் - நகைக் கடை விவகாரம் தொடர்பான புகார்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது சகோதரி உட்பட 6 பேருக்கு சண்டிகர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சல்மான்கான் உட்பட 6 பேருக்கு போலீஸ் சம்மன் - நகைக் கடை விவகாரம் தொடர்பான புகார்
x
சண்டிகர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் அருண் குப்தா என்பவர், காவல்துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், கடந்த 2018ம் ஆண்டு, சல்மான் கானின் 'பீயிங் ஹ்யூமன்' நிறுவனத்தின் பெயரில், பெரிய தொகையை செலவழித்து1 நகைக் கடையைத் துவங்கியதாக குப்தா  தெரிவித்துள்ளார். மேலும், கடைக்குத் தேவையான பொருட்கள் மற்றும் விளம்பரப் பணிகளுக்கான பொறுப்பை சல்மான் தரப்பு ஏற்றுக் கொள்வதாகக் கூறியதாகவும், ஆனால் கடை திறந்து பல நாட்கள் ஆகியும், "பீயிங் ஹ்யூமன்" அறக்கட்டளை  எந்த பணியையும் செய்யாததாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சலும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளதாக குப்தா தனது புகார் மனுவில் கூறியுள்ளார். இந்நிலையில் அருண் குப்தாவின் புகாரின் பேரில் நடிகர் சல்மான் கான், அவரது சகோதரி அல்விரா கான், 'பீயிங் ஹ்யூமன்' அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட 6 பேருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், வரும் ஜூலை 13ஆம் தேதி அனைவரும் நேரில் ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்