மத்திய அரசுப் பணிகளுக்கு புதிய முறை தேர்வு - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு 2022 தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும்: என, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
x
குடிமைப் பட்டியல் 2021 எனும் ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்த மின் புத்தகத்தை டெல்லியில் அவர் வெளியிட்டுள்ளார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசுப் பணிக்கு இளைஞர்களைத் தேர்வு செய்யும் முறையை எளிமைப் படுத்துவதற்கான பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் திருப்புமுனைச் சீர்திருத்தமாக பொதுத் தகுதித் தேர்வு அமைந்திருப்பதாக தெரிவித்தார். பொதுத் தகுதித் தேர்வை நடத்துவதற்காக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் தேசிய ஆட்சேர்ப்பு முகமை அமைக்கப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.   அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம் மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் ஆகியவற்றால் தற்போது அரசுத் துறைகளுக்காக நடத்தப்படும் ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்கு பதிலாக பொது தகுதி தேர்வை தேசிய ஆட்சேர்ப்பு முகமை நடத்தும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்