விஞ்ஞானி நம்பி நாராயணன் கைதான விவகாரம்: உளவுத்துறை தான் முக்கிய காரணம் - கேரளா காவல் துறை அதிகாரி தகவல்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனை கைது செய்ததற்கு, உளவுத்துறை தான் முக்கிய காரணம் என, கேரளா காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்
விஞ்ஞானி நம்பி நாராயணன் கைதான விவகாரம்: உளவுத்துறை தான் முக்கிய காரணம் - கேரளா காவல் துறை அதிகாரி தகவல்
x
தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணனை கைது செய்து சிறையில் அடைத்த விவகாரத்தில், அவர் நிரபராதி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்,  கேரளாவின் முன்னாள் டிஜிபி சிபி மேத்யூஸ், தனக்கு முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நம்பி நாராயணன் தொடர்பான வழக்கில், திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த மாலத்தீவை சேர்ந்த மரியம் ரஷீதா என்ற பெண் மற்றும்,ஸ்ரீ வத்சவா, நம்பிநாராயணனை கைது செய்ததற்கு, உளவுத்துறை அதிகாரி ஸ்ரீகுமார் தான் காரணம் என கூறியுள்ளார். இந்த வழக்கு உளவுத் துறை அதிகாரிகளால் தொடங்கி வைக்கப்பட்ட வழக்கு என்றும் அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்